தங்க விலை சரிவு – நகை கடைகளில் மக்களின் கூட்டம் அதிகரிப்பு

0
428

சர்வதேச பொருளாதார சந்தையில் தங்கம் விலை  மேலும் சரிந்து வருகின்றது. இதனை தொடர்ந்து, பொது மக்கள் அனைத்துலக ரீதியில் நகை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தங்க நகை விற்பனை அதிகரித்துள்ளது.  மேலும் தங்கத்தின் விலை சரிவு காணும் என்று நம்பப்படுகிறது.

சர்வதேச அளவில் தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகள் சீனாவும் இந்தியாவும் அடங்கும். தற்போது ஷாங்கை தங்க மார்க்கெட்டில், தங்கத்தை சீனர்கள் விற்கத் துவங்கி உள்ளனர். இதனால் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் குறையத் துவங்கிவுள்ளது.

சீனாவில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக 4 சதவீதம் தங்கம் விலை சரிந்தது. இதனால் இந்தியர்கள் அதிகம் தங்கம் வாங்குவர் என சர்வதேச பொருளாதார சந்தையில் எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.

.

LEAVE A REPLY