தாய்ப்பால் புகட்டும் திட்டத்தை வெற்றியடையச் செய்வோம் – சுகாதார அமைச்சர் வலியுறுத்தினார் !

0
417

புத்ராஜெயா (MyTimes)- புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதம் தொடங்கி 2 வயது வரையில் தாய்ப்பால் வழங்கும் பழக்கத்தை வலுப்படுத்த வேண்டுமென சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.

சுகாதார அமைச்சர்  டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம், 2015 – ஆம் ஆண்டிற்க்கான உலகத் தாய்ப்பால் புகட்டும் தின விழிப்புணர்வு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார். இந்நிகச்சியில் அவர் தேசிய மகளிர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து மகளிர்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு நாட்டின் வளர்ச்சிக்குப் பெண்களின் பங்கு அளப்பரியது என குறிப்பிட்டார்.

அதேநேரத்தில், தங்கள் பிள்ளைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுதலின் அவசியத்தை அறிந்து முதல் ஆறு மாதம் தொடங்கி குறைந்தது 2 வரையில் வரையில் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நாட்டில் வேலை செய்யக்கூடியவர்களில் 40% பெண்களாகவும், அரசாங்கத் துறையில் சுமார் 60% பெண்களாக இருக்கும் காரணத்தால் இவ்வாண்டுக்கான கருப்பொருள் “வேலையுடன் தாய்ப்பாலையும் புகட்டுதல் : அதனை வெற்றியடையச் செய்வோம்”,  மிகப் பொருத்தமான கருப்பொருளாக அமைந்துள்ளது. குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து உட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் தாய்ப்பாலில் நிறைந்துள்ளது. தாய்ப்பாலை அருந்துதலின் வழி ஒரு குழந்தை முழுமையான வளர்ச்சியை அடைய முடியும். சுகாதார அமைச்சின் ஆய்வின்படி சுமார் 44.4% பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதத்திற்கு முழுமையாகத் தாய்ப்பால் புகட்டும் பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். இதனை 100% உயர்த்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து கையாண்டு வருகின்றது.

குறிப்பாக, அரசாங்கப் பிரிவில் வேலை செய்பவர்களுக்கு அரசாங்கம் விடுமுறை சலுகைகளைகளோடு குழந்தைகளுக்கு துணையான மருத்துவமனையும் அடங்கும். நாட்டில் இதுவரையில் சுமார் 147 குழந்தைகளுக்குத் துணையான மருத்துவமணை செயல்பட்டு வருகின்றது.

அதேநேரத்தில், தனியார் நிறுவனங்களும் தாய்ப்பால் புகட்டுதலின் அவசியத்தை அறிந்து அவர்களின தேவைக்கேற்ப வசதிகளைச் செய்து தர வேண்டும். அப்பொழுதுதான் பெண்கள் அவர்களது வசதிக்கேற்ப வேலையிடங்களிலும் தாய்ப்பால் வழங்க வசதியாக அமையும். இதன்வழி, முதல் ஆறு மாதத்திற்குத் தாய்ப்பால் புகட்டும் திட்டத்தை 100% உயர்த்துவதற்கு பெரும் துணையாக இருக்கும் எனவும் அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் – (MyTimes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here