புத்ராஜெயா(MyTimes) – 2015 – ஆம் ஆண்டிற்க்கான உலகத் தாய்ப்பால் புகட்டும் தின விழிப்புணர்வு கொண்டாட்டம் புத்ராஜெயாவில் அமைந்துள்ள புஸ்பானித்தாபூரியில் நடைபெற்றது. “வேலையுடன் தாய்ப்பாலையும் புகட்டுதல் : அதனை வெற்றியடையச் செய்வோம்” (Penyusuan Susu Ibu dan Kerja : Mari Jayakan!) எனும் கருப்பொருள் கொண்டு இவ்வாண்டு விழிப்புணர்வு கொண்டாட்டம் துவங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியைப் பிரதமரின் துணைவியார் டத்தின் படுக்கா ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.  மகளிர் குறிப்பாக வேலை செய்யும் தாய்மார்கள் இந்த விழிப்புணர்வு கொண்டாட்ட நிகழ்ச்சியில் திரண்டு சிறப்பித்தனர்.

தாய்ப்பால் புகட்ட தாய்மார்களுக்கு பொது இடங்களிலும் அலுவலகங்களிலும் சிறப்பு வசதி அதிகரிக்கப்பட பட வேண்டும், இதனை செயல்ப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் மட்டும் செயல்ப்பட்டால் போதாது , தனியார் துறையினரும் பொதுமக்களும் இணைந்து செயலாற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பொது இடங்களில், இரயில் போன்ற பொது போக்குவரத்து மற்றும் பல இடங்களில் பால் புகட்டும் இடங்கள் அமைத்து தரப்பட்டிருகின்றன. எனவே, நாமும் நம் நாட்டில் இது போன்ற வசதிகளை உருவாக்கி கொடுப்பது மிக அவசியம் என்று தனது சிறப்புரையில் கூறினார் ரோஸ்மா மன்சோர்.

அதோடு,தேசிய மகளிர் தினக் வாழ்த்துக்களை கூறி, மலேசிய வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முக்கியமென பிரதமரின் துணைவியார் வலியுறுத்தினார். சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் இதர அரசு மற்றும் தனியார் துறையிலிருந்து முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

தேசிய ரீதியில் நடத்தப்படும் இதுபோன்ற முக்கிய விழிப்புணர்வு கொண்டாட்டங்கள் , பெண்களின் உரிமை, சுதந்திரம் அவர்களின் வளர்சியையும், முக்கியதுவத்தையும் அரசாங்கம் என்றும் தொடர்ந்து பாதுகாத்து வருவதாகவும், இது ஒரு பாராட்டதக்க செயல் என்றும் நிகழ்வில் கலந்து கொண்ட தாய்மார்கள் கருத்துரைத்தனர்.(MyTimes)

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here