புத்ராஜெயா (Mytimes) – பி.ஓ.எல் எனப்படும் பகுதி நேர தாய்மொழிக் கல்விப் பாடத்தை நீக்கும் ஆலோசனை திட்டம் உடனடியாக கல்வி அமைச்சால் மீட்டுக்கொள்ளப்பட்டது என துணைக்கல்வி அமைச்சர் ப.கமலநாதன் அறிவித்துள்ளார். கல்வி அமைசரோடு உடனடியாக சிறப்பு சந்திப்பு நடத்தி, எதிர்ப்புக் குரல் கொடுத்து இத்திட்டதிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இவர்.

பகுதிநேர தாய்மொழிக் கல்விப் பாடத்தை நீக்கும் திட்டத்தை நிறுத்தும் ஆலோசனையை  கல்வியமைச்சின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ டாக்டர் மடினா முகமட் அவர்கள் அறிக்கையில் வெளியிட்டிருந்தது குறிப்பிடதக்கது. எனவே இதற்கு உடனடி  எதிர்ப்பு தெரிவித்து . கல்வி அமைச்சரோடு பேச்சு வார்த்தை நடத்தி அவ்வாலோசனையை மீட்டுக்கொள்ள செய்துள்ளார் கமலநாதன் என்பது குறிப்பிடதக்கது. கல்வியமைச்சின் செலவீனத்தைக் கட்டுப்படுத்துவதற்காக (பி.ஒ.எல்) பகுதி நேர தாய்மொழிக் கல்விப் பாடத்தை நீக்கும் திட்டம் அர்தமற்றது மற்றும் செலவீனத்தைக்காட்டி இப்பாடத்தினை நிறுத்துவது ஏற்புடையது அல்ல.

நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி பாடத்திட்டத்தை நிறுத்துவது மாணவர்களுக்குப் பாதிப்பை உருவாக்கும். ஒவ்வொரு மாணவருக்கும் தாய்மொழிக் கல்வி மிக அவசியமானது. ஒவ்வொரு குடிமகனும் தாய்மொழிக் கல்வி பயிலுவதற்க்கான அவசியத்தை யுனெஸ்கோ தனது ஆய்வில் தெளிவுப்படுத்தியிருக்கின்றது. அந்த கூற்றுக்கு சான்றாக மலேசிய கல்வி மேம்பாட்டுப் பெருந்திட்டத்திலும் தாய்மொழிக் கல்விக்கு மலேசிய அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கும் என ஆணிதரமாக குறிப்பிட்டுள்ளது.

பகுதிநேர தாய்மொழிப் பாடத் திட்டத்தினை நிறுத்தினால் கண்டிபாக தமிழ் மொழி பயிலவும் மாணவர்களுக்கு வாய்ப்பு கிட்டாது. இது கண்டிபாக பெரிய இழப்பை நமக்கு ஏற்படுத்திவிடும். தாய்மொழிக் கல்வியானது ஒரு மனிதனை முழுமையாக்குகின்றது. எனவே ஒவ்வொரு மாணவரும் தங்களின்  தாய் மொழி கல்வியை பயிலும் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் கமலநாதன் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, எக்காரணத்தைக் கொண்டும், எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்மொழிப் பாடத்தையோ அல்லது தமிழ்ப்பள்ளிகளையோ தாம் விட்டுக்கொடுக்கப்போவதில்லை எனறார். மாணவர்களும் தமிழ்ப்மொழிப் பாடத்தைக் கற்க அதிக ஆர்வம் காட்ட வேண்டும் மற்றும்  பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள், பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடத்தைக் கற்க ஊக்குவிக்க வேண்டுமெனவும் அவர் அறிக்கையில் தெளிப்படுத்தியிருந்தார்.

(பி.ஒ.எல்) பகுதிநேர தாய்மொழிப் பாடத் திட்டத்தினைத் தொடர்ந்து செயல்படுத்துவதை உறுதி செய்த கல்வி அமைச்சர் டத்தோ மஹாட்சீர் காலிட் அவர்களுக்கு கமலநாதன் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். (Mytimes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here