ஷா அலாம் (Mytimes) – நிறைவு பெற்ற சுங்கை ரெங்காம் தமிழ்ப் பள்ளியின் கட்டுமானப் பணியைத் துணைக்கல்வி அமைச்சர் கமலநாதனொடு சிறப்பு வருகை புரிந்தார் ம.இ.கா தேசிய தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம். சிறப்பு வருகைப்புரிந்த இரு தலைவர்களுக்கு சுற்றுப்புற மக்கள் குழுமி நல்ல வரவேற்ப்பு வழங்கினர். சுமார் 897 மாணவர்கள் கொண்டு போதிய பள்ளியறைகள் இல்லாமல், வசதிக்குறைவாக செயல்ப்பட்டு வந்தது சுங்கை ரெங்காம் தமிழ்ப் பள்ளி.

பெற்றோர் ஆசிரியர் சங்கம், தமிழ்ப்பள்ளி வாரியம் போன்றோரின் கோரிக்கைக்கு இணங்க ம.இ.காவின் ஒத்துழைப்போடு கல்வி அமைச்சின் வழி இப்பள்ளிக்கு புதிய கட்டட நிர்மாணிப்பு துவக்கப்பட்டது. சிறந்த அமைப்புடன் , வசதியுடன் சீரான முறையில் இக்கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. ஆரம்பள்ளி மிக அவசியமானதாகும், தமிழ்ப் பள்ளி அதற்கு அடிதளம், எனவே அனைத்து வசதிகளை பூர்த்தி செய்து கொடுப்பதால் மாணவர்கள் படிப்பதற்கு சிறந்த சூழல் அமைகிறது.  சிறந்த தரம், வசதி கொண்டு தமிழ்ப்பள்ளிகள் செயல்பட நாங்கள் என்றும் துணையாக இருப்போம் என்று சுப்ரமணியம் கூறினார்.

தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் மலேசியாவில் பாதுகாக்கும் பொருப்பு ஒவ்வொரு தமிழர்களின் பொருப்பாகும். இந்தியர்களின் தாய் கட்சியாகிய ம.இ.கா என்றும் இதற்கு உறுதுனையாக இருக்கும். தமிழ் மொழி, தமிழ்ப் பள்ளி, கலாச்சாரம் போன்ற இந்தியர்களின் முக்கிய உயிர்நாடிகளைப் பாதுகாப்பது எங்களின் தலையாய பணியாகும். எத்துணை சவால்கள் வந்தாலும் அதனை ம.இ.கா எதிர்க்கொள்ளும்.

மலேசிய இந்தியர்களின் பதுகாவலனாய் இருப்பது எங்களின் கடமை.தற்போதைய காலகட்டத்தில் இத்தமிழ்ப் பள்ளிகளை மூடுவதற்கு பல குழப்பவாதிகளின் தகவல்கள் ஊடகங்களில் பபிரசுரிக்கப்படுகிறது. இதுப்போன்ற எத்துணை சவால்கள் வந்தாலும் சலைக்காமல் ம.இ.கா எதிர்கொள்ளும்.நம் தமிழ் கல்வி நிலைத்து வாழும், நமது தமிழர் கலாச்சாரமும் இம்மண்ணில் நிலைப்பபெறும் என்று மிக உறுதியாய் கூறினார் ம.இ.கா வின் தேசியத் தலைவர்.

சுங்கை ரெங்காம் தமிழ்ப் பள்ளியில் மிக அதிகமான சமுக நிகழ்ச்சிகள்,மக்கள் சேவைப்பணி, போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைப்பெறுகின்றன. இந்தியர்களின் கல்வி வள்ர்ச்சியை மட்டும் வழங்காமல் மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டிற்கு முக்கிய பங்கு வகுக்கிறது தமிழ்ப்பள்ளிகள். கல்வி ரீதியில் மாணவர்களின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் அர்பணிப்பும், பங்கும் அளப்பெரியது. சிறந்த இந்திய சமுகம் உருப்பெற அடிதளமாய் அமைந்துள்ளது தமிழ்க் கல்வியும் தமிழ்ப்பள்ளியும்தான். இன்றையக் காலக்கட்டத்தில் நிறைய இந்தியர்கள், சமூக இயக்கங்கள், தன்னார்வளர்கள் தமிழ்ப் பள்ளியின் வளர்ச்சிக்கும் நம் மாணவர்களின் மேம்பாட்டிற்கும் பெருபங்காற்றுகின்றனர்.

இதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஆரம்பப் பள்ளிக்கு பிறகு அவர்கள் மேற்க்கொள்ளும் அடுத்தகட்ட நிலையிலான படிப்பினிலும் நாம் அதி கவனம் செலுத்தவேண்டும். நம் மாணவர்களின் சீரான வள்ர்சியை தொடர்ச்சியாய் செயல்ப்படுத்தவேண்டும் என்றும் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவையினரிடம் தெரிவித்தார். (Mytimes)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here