பெட்டாலிங் ஜெயா (Mytimes) – “சிலாங்கூர் மாநில ஸ்குவாஷ் போட்டிகள் 2015” இனிதே அஸ்தக்கா விளையாட்டு மையத்தில் மிக பிரமாண்டபாக  தொடக்கப்பட்டது. சிலாங்கூர் மாநில ரீதியிலான இப்போட்டியை பெராங்சாங் சிலாங்கூர் குழுமத்தினர் ஏற்று நடத்தியுள்ளனர். சிலாங்கூர் மாநிலத்திலிருந்து திறன் பெற்ற மிக அதிகமான இளம் ஸ்குவாஷ் வீரர்களை உருவாக்கி , அவர்களை தேசிய ரீதியில் வெற்றி வாகைச்சூடி பெயர்பத்திக்க செய்வதே பெராங்சாங் சிலாங்கூர் குழுமத்தினர் அடிப்படை நோக்கமாகும்.

இப்பிரமாண்ட மாநில ரீதியிலான  ஸ்குவாஷ் போட்டியை ,சிலாங்கூர் ஸ்குவாஷ் சங்கத்தலைவர் திரு.பாரிட் யூனுஸ் மற்றும் பெராங்சாங் சிலாங்கூர் தலைவர் பெளஷி முகமட் கஷாலிட்டும் இணைந்து துவக்கிவத்தனர். இவ்விளையாட்டுத்துறையில் மிக அதிகமான திறன் கொண்ட புதுமுகங்களை அடையாளம் கண்டு அவர்களை பட்டைத்தீட்டி தேசிய ரீதியிலும் உலகளாவிய ரீதியிலும் சாதனைப்படைக்க செய்வதே முக்கிய குறிக்கோளாகும்.அதோடு சிலாங்கூர் மாநிலத்தில் அதிகமான ஸ்குவாஷ் விளையாட்டாளர்கள் உருவாக்குவதும் இப்போடியின் அடிப்படை நோக்கமென அதிகாரப்பூர்வ உரையில் இவர்கள் இருவரும் வந்திருந்த பொதுமக்களுக்கு தெரிவித்தனர்.

மிக அதிகமான விளையாட்டாளர்கள் இப்போட்டியில் பங்கெடுத்துள்ளனர் என்பது மகிழ்ச்சியளிக்கக்கூடிய தகவலாகும். கிடைக்கப்பெருகின்ற வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி கொண்டு அதில் வெற்றிகளையும் முன்னேற்றத்தையும் காண்பது நமது கடமையாகும்.பிள்ளைகளை ஊக்குவித்து இப்போட்டிகளில் குழந்தைகளின் ஈடுபாட்டை அதிகரித்துள்ள பெற்றோர்களின் முயற்சிக்கு பாரட்டுகளும் நன்றிகளும் உரிதாகும்.

தொடர்ந்து விளையாட்டுத்துறைகளில் ஈடுபாட்டை அதிகரித்து முன்னேற்றம் காண்போம் என்று 2015 ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில ஸ்குவாஷ் போட்டியின் இயக்குநர்  புஷ்பாதேவி தெரிவித்தார். புஷ்பாதேவி இளம் வயதில் ஸ்குவா‌ஷ் விளையாட்டுக்களில் தனக்கென தனி சாதனை முத்திரையை பதித்து இன்று இவ்விளையாட்டுத்துறையில் பயிற்சியாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடதக்க தகவலாகும்.

சுமார் 9 வயதிலிருந்து 19 வயதிற்க்குட்பட்டவர்கள் மாநில ரீதியில் மிக அதிகமாக இப்போட்டியில் பங்கெடுத்தனர் தங்களின் தனியாற்றலை வெளிப்படுத்தினர்.மாநில அளவிலான நடத்தப்படும் இப்போட்டி வருகின்ற செப்டம்பர் 26 ஆம் திகதி சனிக்கிழமை நிறைவை நாடுகிறது. எனவே, ஆர்வம் கொண்டவர்களும் பொது மக்களும் இதில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கலாம். (Mytimes)

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •