புத்ராஜெயா (Mytimes) – மலேசிய தேசிய தினத்தை முன்னிட்டு தனது (Facebook) அகப்பக்கதின் வழி துணைக்கல்வி அமைச்சர் ப.கமலநாதன் தேசிய தின சம்பந்தப்பட்ட புகைப்படம் அனுப்பும் போட்டியை வழிநடத்தியிருந்தார். அந்த போட்டியின் வெற்றியாளர்களுக்கு இன்று புத்ராஜெயா தனது கல்வி அமைச்சு அலுவலகத்தில் பரிசுகளை எடுத்து வழங்கினார். பொது மக்களிடமிருந்து மிக வரவேற்க்கும் வண்ணம் , 100-க்கும் மேற்ப்பட்ட பங்கேற்புகள் வந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

சிறந்த புகைப்படம் அனுப்பிய நான்கு வெற்றியாளர்களுக்கு (Samsung Tablet Tap 4),   (I-Pod).(),(Lenovo) கைப்பேசி போன்ற சிறப்பு பரிசுகளை எடுத்து வழங்கினார். இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் , அந்த நான்கு வெற்றியாளர்கள் ஆவர். முதல் பரிசை மாணவர் அமாட் அகில் முகமட் அலி, இரண்டாம் பரிசை பகாங் இண்டரா மக்கோத்தா ஆரம்பப்பள்ளி ஆசிரியர் நூர்ஜஹான் சுல்தான், மூன்றாம் பரிசை ஈபோ ரப்பாத் செத்தியா ஆரம்பப்பள்ளி ஆசிரியர் முகமட் அசிசுல் ரஹிம் முசா மற்றும் நான்காம் பரிசை பண்டாராயா இடைநிலைப்பள்ளி மாணவர் முத்து பாரதி பெற்றனர்.

இப்போட்டியின் பரிசுகள் முழுவதையும் தனது சொந்த செலவிலேயே வழங்கினார் ப.கமலநாதன் என்பது குறிப்பிடதக்கது. மலேசியர்களிடையே நாட்டு பற்று மேலோங்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். தேசப் பற்று ஒவ்வொருவர் மனதிலும் பதிய வேண்டும் , அப்பொழுதுதான் பல்லின மக்களிடையே புரிந்துணர்வு அதிகமாகும். அந்த அடிப்படை நோக்கத்திற்கே தனது சொந்த முயற்சியில் இந்தப் போட்டியை வழிநடந்தினார் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கினால் தாழ்வு என்பதற்கொப்ப நாம் மலேசியர்களாக ஒருங்கிணைந்து வாழவேண்டும் என்று பரிசளிப்பு அங்கத்தில் துணைக்கல்வி அமைச்சர் ப.கமலநாதன்  தெரிவித்தார்.(Mytimes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here