ஷா அலாம் (Mytimes) – பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்களின் ஆட்சி காலமே , தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்தியர்களுக்கும் பொற்காலம் என டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார். 2009 முதல் 2015 ஆண்டு வரை தமிழ்ப்பள்ளிகளுக்குப் பொற்க்காலமாக கருதப்படுகிறது. தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு  மிக அதிகமான நிர்மாணிப்பு மாணியங்கள் வழங்க்கப்பட்டுள்ளது இவ்வாண்டுகளில். பகுதியுதவி பெறக்கூடிய தமிழ்ப்பள்ளிக்கும் அதிகமாணியங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. முந்தைய காலங்களில் தமிழ்ப்பள்ளிக்கு கிடைக்கப்பெற்ற தொகையைவிட அதிகமாக இந்த ஆறு வருட காலங்களில் கிடைக்கப்பெற்றுள்ளது.

பெருளாதார ஊக்குவிப்பு திட்டத்தில், தமிழ்ப்பள்ளியின் வள்ர்ச்சி நிதிக்கு 10 கோடியினை வழங்கினார்  பிரதமர் நஜிப் துன் ரசாக். அதன் நிதி ஒதுக்கீட்டில் சுங்கை ரெங்காம் தமிழ்ப் பள்ளி கட்டட நிர்மாணிப்பு பணிக்கு மொத்தம் 2.8 மில்லியன் வழங்கப்பட்டது. 12 பள்ளி அறைகள் கொண்ட புதிய கட்டடம் ஜனவரி மாத முதலில் துவக்கப்பட்டு இம்மாதத்தில் நிறைவுப்பெற்றுள்ளது

ம.இ.கா வின் விடா முயற்சியினாலும் தூண்டுதலாலும் பிரதமர் நஜிப் துன் ரசாக் நமது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து மிக அதிகமான மாணியங்களை தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல், இன்றைய தமிழ்ப்பள்ளியின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது மலேசியாவில் 524 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன, அறிவிக்கப்பட்ட 6 புதிய தமிழ்ப்பள்ளிகளின் திட்டங்கள் நிறைவேறினால் இவ்வெண்ணிக்கை 530 ஆக கூடிய விரைவில் மாறும். தமிழ்க் கல்வியின் வளர்சிக்கும் அதன் உருமாற்றத்திற்கும் நாங்கள் என்றும் உருதுணையாக இருப்போம்.

தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியின் பொற்காலத்திற்குக் கண்டிபாக பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்களின் பங்கு அளபெரியது. அவரது ஆட்சியில்தான் இவ்வளவு  அதிகமான நிதி ஒதுக்கீடு தமிழ்ப்பள்ளிகளுக்குக் கிடைக்கபெற்றுள்ளது. தமிழ்ப் பள்ளிகளுக்கென உருமாற்று செயல்த்திட்ட குழுமம், ஆய்வு குழு,கண்காணிப்பு அதிகாரிகள் போன்ற முக்கிய அமைப்புகளை உருவாக்கி கொடுத்தவ்ர் நஜிப் துன் ரசாக்.தானே தமிழ்ப் பள்ளிகளுக்குப் பல முறை சிறப்பு வருகைப் புரிந்திருக்கிறார்.

1 மலேசியா என்ற கோட்பாட்டிற்கிணங்க இவர் தமிழ்ப் பள்ளிகளின் வள்ர்ச்சிக்கு பல நன்மைகளை உருப்பெற செய்துள்ளார்.  ம.இ.கா கோரிக்கைக்கும் தூண்டுதலுக்கு செவிசாய்த்து  இன்றைய தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அடிதளமாய் அமைந்திருக்கிறார். இன்றைய தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் , இந்தியர்களின் உருமாற்றதிற்கும் நஜிப் துன் ரசாக் மிக அதிக பங்காற்றிருக்கிறார் என்பது குறிப்பிடதக்க உண்மையாகும் என்று ம.இ.கா வின் தேசிய தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மற்றும் துணைக்கல்வி அமைச்சர் ப.கமலநாதன் தெரிவித்தார்கள். (Mytimes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here