பழனிவேல் தரப்பும் மறுதேர்தலில் போட்டியிடலாம்- டாக்டர் சுப்ரமணியம்

0
254

கோலாலம்பூர், ஜூன் 7- எதிர்வரும் ம.இ.கா மறுதேர்தலில் தகுதி பெற்ற அனைத்து ம.இ.கா உறுப்பினர்களும் கலந்துகொள்ளலாம்.

கட்சியின் துணைத் தலைவரும், கட்சியின் தேசியத் தலைவராகத் தம்மை பிரகடனப் படுத்திக்கொண்டவருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், எதிர்வரும் கட்சியின் மறுதேர்தலின் போது, யாரும் பழிவாங்கப்படமாட்டார்கள் என தெரிவித்தார்.“ம.இ.கா உறுப்பினர்கள் யாரையும் மறுதேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுத்து, பழிவாங்கும் அவசியம்” எங்களுக்கு இல்லை’ என ம.இ.கா கிளைத்தலைவர்களுடனான விருந்துபசரிப்பு நிகழ்ச்சியின் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 “ம.இ.கா மறுதேர்தல் ஜூலை 10 மற்றும் ஜூலை 12-ஆம் தேதிகளில் வேட்புமனு தாக்கலும், ஜூலை 20 மற்றும் ஜூலை 26-ஆம் தேதிகளில் அதிகாரப்பூர்வ தேர்தல்களும் நடைபெறும். எல்லா ம.இ.கா உறுப்பினர்களும் இதனை நன்கு அறிந்திருக்க வேண்டும்” என டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

ம.இ.காவின் இடைக்கால மத்திய செயற்குழு  கூட்டத்தைக் கட்சித் தலைமையகத்தில் நடத்திய டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here