பக்கத்தான் அரசாங்கம் சட்டத்தை மீறுகிறதா? தொடரும் அராஜகங்கள்! பக்கத்தான் இந்திய தலைவர்கள் எங்கே? அர்விந்த்கிருஷ்ணன் தாக்கு.

0
349

பூச்சோங் ஆக 19 – இந்திய சமுதாயத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து பக்கத்தான் அரசாங்கத்தின் நகராண்மைக் கழகம் ஆலயங்களை உடைப்பது, கடைகளை உடைப்பது, அத்துமீறி நடந்து கொள்வது என தனது அராஜகங்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. அதனைத் தொடர்ந்து கோய் கின்றாரா என்ற இடத்தில் சத்யவேலு என்பவருக்கு சொந்தமான உலோகப்பொருள் மறுசுழற்சி கடையை நகராண்மைக் கழக அதிகாரிகள் சேதப்படுத்தியதோடு அதனை உடைக்கவும் முற்பட்ட நிலையில் மஇகா தேசிய இளைஞர் பகுதியும், பூச்சோங் மஇகா இளைஞர் பகுதியும் இணைந்து போராடி தடுத்து நிறுத்தியது.

இந்திய சமுதாயத்தை குறி வைத்து நடத்தப்படுகின்ற அத்துமீறல்களை தட்டிக்கேட்க கூட பக்கத்தான் இந்திய தலைவர்களுக்கு நேரமில்லை. இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை என சம்பவத்தை கேள்விப்பட்டு அந்த இடத்திற்கு விரைந்து வந்த மஇகா தேசிய இளைஞர் பகுதி செயலாளர் அர்விந்த்கிருஷ்ணன் கூறினார்.

எந்த ஒரு அறிவிப்புக் கடிதமும் இல்லாமல் அத்துமீறி சுமார் 4 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இந்த கடையானது புறம்போக்கு இடத்திலும் இல்லை. பல ஆண்டுகளாக தனியாரிடம் வாடகைக்கு, இந்த இடத்தில் சத்யராஜ் என்பவர் தொழில் செய்து வருகிறார். இந்த சம்பவத்தின் தொடர்பில் உலோகப்பொருள் மறுசுழற்சி வியாபாரிகள் சங்கத்தலைவர் டத்தோ கிருஷ்ணமூர்த்தி மஇகா இளைஞர் பகுதியை தொடர்பு கொண்டு அவரும் இந்த போராட்டத்தில் இருந்தார்.

ஆராய்ந்து பார்த்ததில் இந்த நடவடிக்கை சட்டத்திற்குட்பட்டு நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது. 1 ½ வருடத்திற்கு முன்பு இது சம்பந்தமாக பிரச்சனை எழுந்த போது சட்டப்படி இந்த கடையை காலி செய்கிறோம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் சட்டப்படி அதற்கு அனுமதி பெறாமல் பக்கத்தான் அரசாங்கத்தின் நகராண்மைக் கழகம் அடாவடியாக நடந்து கொண்டுள்ளது சரியல்ல என இளைஞர் பகுதியினர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்த மாதிரியான அநியாயம் வேறு எங்கும் நடைபெறாது என சுற்று வட்டாரத்தினர் வருத்தத்தோடு தெரிவித்தனர்.சத்யவேலு குடும்பத்தினர் இளைஞர் பகுதியினரின் உதவியோடு காவல் துறையில் இந்த சம்பவம் குறித்து புகார் செய்துள்ளனர். மேலும் அவர்கள் மஇகா தேசிய இளைஞர் பகுதி செயலாளர் அர்விந்த்கிருஷ்ணன், தகவல் பிரிவுத்தலைவர் கேசவன் கந்தசாமி, பூச்சோங் இளைஞர் பகுதியை சார்ந்த சுபாஷ் சந்திரபோஸ், எம்.ஜி.விஜய், நந்தகுமார் உள்ளிட்ட இளைஞர் பிரிவினருக்கு தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

கண்டிப்பாக இவர்கள் இல்லாவிடில் ஒட்டுமொத்த கடையையும் நகராண்மைக்கழகத்தினர் உடைத்து தரைமட்டமாக்கியிருப்பார்கள் என வேதனையோடு தெரிவித்தனர். சமுதாயத்தின் உணர்வுகளில் குளிர் காய்ந்து ஆட்சியை பிடித்த பக்கத்தான் அரசாங்கத்தின் இந்திய தலைவர்கள் சமுதாய மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க முடியாமல் இருப்பது வருத்தமாக உள்ளது. ஆனால் எங்கள் மஇகா இளைஞர் பகுதி இந்த சம்பவம் குறித்து சட்டநடவடிக்கை எடுக்கும் என அர்விந்த்கிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட டத்தோ டி.மோகன் அவர்களும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து நிலைமையின் தீவிரத்தை கண்டறிந்தார். ஆனால் பக்கத்தான் அரசாங்கத்தின் சார்பில் ஒரு இந்திய தலைவர்கள் கூட அங்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை தொடர்பு கொண்டும் பலனில்லை என்பது வருத்தம் தெரிவிக்கக்கூடிய ஒன்று என சுற்றுவட்டாரத்தினர் தெரிவித்தனர்.

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.