நஜீப்புக்கு ஆதரவாக அமைச்சரவை உள்ளது-கைரி

0
187

புத்ராஜெயா, ஜூலை 8- 1MDB பணம், பிரதமர்  டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது தொடர்பான விவகாரத்தில் அமைச்சரவையில் யாரும், அவரை பதவி விலக வேண்டும் என நெருக்குதல் அளிப்பதில்லை.சட்டம் முடிவு செய்யும் வரையில் எந்தவொரு முடிவுக்கும் வந்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அமைச்சரவை “ஒற்றுமையாக” இருப்பதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.  “இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், சமகால விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என கைரி தெரிவித்தார்.

“வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதா வேண்டாமா என தாம் இன்னமும் யோசிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.  பிரதமரின் வழக்கறிஞர்கள் முன்னெச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது உங்கள் அனைவருக்குமே தெரியும்” என கைரி தெரிவித்தார்.“அட்டர்னி ஜெனரல், காவல்த்துறை, மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் உள்ளிட்ட சிறப்பு பணிக்குழு இவ்விவகாரத்தை ஆராய்ந்து வருகிறது” என கைரி பிரதமர் துறை அலுவலகத்தில் நடைபெற்ற பெர்டானா ஃபெல்லோஷிப் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.இந்நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பிரதமர் நஜிப், நிருபர்களை சந்திக்காமலேயே உடனடியாக அங்கிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. Vanakam Malaysia

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here