காஜாங் (Mytimes) -வாரந்தோரும் இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களுக்காக சமூக நல அறவாறியம் பள்ளிக்கூடதிற்கே சென்று சிறப்பு தன்முனைப்பு , நன்னெறிப் பண்புகள் மூலம் நடத்தை சீர்திருத்தம் போன்றவைகள் நடத்திவருகின்றன.இந்த சிறப்பு அங்கத்தில்  வாரந்தோரும் பல தகவல்கள் தந்து மாணவர்கள் உருமாற்றத்திற்கு முயற்சி செய்து வருகின்றது சமூக நல அறவாறியம்.

இந்திய ஆசிரியர்களின் துணையோடு  சமூக நல அறவாறியம், காஜாங் ஜாலான் ரெகோ இடைநிலைப்பள்ளியில் இந்த சிறப்பு அங்கத்தை  பல மாதங்களாக தொடர்சியாக வழிநடத்திகொண்டு வருகின்றன. பள்ளியில் அதிக கட்டொழுங்குப் பிரச்சினை, படிப்பில் நாட்டமின்மை, இளப்பருவத்திலே காதல், கூடா நட்பு, குடிப்பழக்கம் போன்றவற்றிலிருந்து மாணவர்கள் மீட்டெடுக்க இந்த சிறப்பு அங்கம் வாரந்தோரும் நடத்தபடுகின்றது.

படிவம் ஒன்றிலிருந்து படிவம் மூன்றுவரையில் பயிலும் அனைத்து இந்திய மாணவர்கள் இந்த வழிகாட்டி பட்டறையில் கலந்துகொள்ளப் பள்ளிக்கூடம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.இளப்பருவத்திலேயே இவர்களைத் தொடர்ச்சியாக கண்காணித்து வந்தால் கண்டிபாக இவர்கள் சிறந்த மாணவர்களாக உருமாற்றம் பெருவர் மற்றும் ஒழுகத்திலும் சிறந்து விளங்க்குவர் என்பது இப்பயிற்சியின் அடிப்படை நோக்கமாகும்.

இந்த சிறப்பு அங்கத்தில் மலேசிய தேசியப் பல்கலைக்கழக மாணவர்கள் சமூக நல அறவாறியத்தோடு இணைந்து மாணவர் உருமாற்றத்திற்கு துணைப்புரிந்துள்ளனர். மாணவர்களுக்குத் தன்முனைப்பு , சுயமாக சிந்தித்து நல்வழியில் செயல்படும் ஆற்றல்,பெற்றோரின் தியாகம்,மாணவர்களின் எதிர்காலம் போன்ற முக்கிய அம்சங்களை இப்பல்கலைக்கழக மாணவர்கள் இப்பயிற்சியில் மாணவர்களுக்கு விளங்கும் வண்ணம் புகுத்தினர்.

இடைநிலைப்பள்ளி பருவத்திலேயே தடமாறி செல்லும் தம்பி தங்கைகளுக்கு நல்வழிகாட்டுவது தங்களின் கடமை என்றும் , சமுதாய வளர்சிக்கு பல்கலைகழக மாணவர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். அதோடு , என்றும் மலேசிய தேசியப் பல்கலைக்கழக மாணவர்கள் சமுதாய சேவை செய்ய வழிவகுத்து கொடுக்கும் சமூக நல அறவாறியத்திற்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக சிறப்பு மாணவர் அங்கத்தை வழிநடத்திய சட்டத்துறை மாணவர் சகோதரர் தினேஷ் விஜயகுமாரன் விளக்கமளித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் பட்டப்படிப்போடு இது போன்ற சமுதாய சேவைகளில் ஈடுப்பட்டு பல அனுபவங்களைப் பெருக்கிக் கொள்ளலாம், மற்றும் வழித்தெரியாமல் தத்தளிக்கும் நம் இந்திய மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பல்கலைக்கழக மாணவர் தொடர்ந்து தங்களின் சேவைப் பணியை ஆற்றுவர் என்று அவர் தெரிவித்துக் கொண்டார். (Mytimes)

LEAVE A REPLY