மலாக்கா (Mytimes) – பல்லூடக பல்கலைக்கழகத்தில் (MMU) வருடாந்தோரும் மாணவர்கள், இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டியை ஏற்ப்பாடு செய்வதில் தவறுவதில்லை.இவ்வருடமும் இம்மாணவர்கள் (MMU) பல்லூடக பல்கலைக்கழக இடையிலான கபடி போட்டியை மிக விமர்சையாக வழிநடத்தியுள்ளனர்.

தனியார் பல்கலைக்கழகமாக இருந்தாலும் இவர்களின் சமுதாய பணியும், இதுபோன்ற மாணவர்கள் பயன்பெரும் நிகழ்ச்சிகளை வழிநடத்துவதிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். (ICS) எனும் பல்லூடக பல்கலைக்கழக இந்திய மாணவர்களின் கழகம் இக்கபடி போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. சைபர்ஜெயா, மற்றும் மலாக்காவில் அமைந்துள்ள பல்லூடக பல்கலைக்கழக இந்திய மாணவர்கள் பங்கெற்றனர்.

இக்கபடி போட்டியில் மலாக்கா  பல்லூடக பல்கலைக்கழக மாணவர் அணியினர் முதல் இடத்தை வென்றனர் மற்றும் சைபர்ஜெயா மாணவர்கள் இரண்டாம் இடத்தை வென்றனர். இம்முறை இக்கபடி போட்டி மிக சிறப்பாக , இந்திய மாணவர்களின் முழுஆதரவோடு நடந்தது என்று ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர். சுமார் ஒன்பது குழுவினர் இதில் காலை ஒன்பது மணி முதல் மாலை 6 மணி வரை களத்தில் இறங்கி சிறப்பித்தனர்.பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் சுற்றுவட்டார மக்களும் மாணவர்களின் சாகசத்தைக் காண திரண்டிருந்தனர்.

இன்றைய காலக்கட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களிடையே, பாரம்பரிய விளையாட்டுகளின் மீது நாட்டம் அதிகமாகவே இருக்கின்றது.மாணவர்கள் விளையாட்டுதுறைகளில் தங்களை ஈடுபடுத்திகொள்ள அதிக வாய்ப்புகளை பல்கலைக்கழகமும், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் பக்கபலமாகவும் தூண்டுகோலாகவும் செயல்படுகின்றது.

மேலும் இந்த இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டாகிய கபடியை, தொடர்ந்து வழிநடத்த அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் மற்றும் பல்லூடக பல்கலைக்கழக மாணவர்கள் என்றும் முன்னுதாரணமாக விளங்குவோம் என்று அப்பல்கலைக்கழக மாணவர் தினேஸ் சௌந்தராஜ் தெரிவித்தார்.(Mytimes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here