மின்னலுக்கு மவுசு அதிகரித்து விட்டது – திரண்டது அலைகடல் இரசிகர் கூட்டம் !

0
520

பினாங்கு JURU AUTOCITY-யில் நடைப்பெற்ற மின்னல் ஒலி அலையின் “இசையும் இசையும்” நிகழ்ச்சிக்கு மக்களின் கூட்டம் அலைகடலென திரண்டது. சுமார் 12000 மின்னல் ஒலி அலையின் தீவிர ரசிகர்கள் உள்நாட்டு கலைஞர் பாடும் இளையராஜா மற்றும் A.R.ரஹ்மான் பாடல்களை கேட்க பினாங்கிற்கு வந்திருந்தனர்.

வெளிநாட்டிலிருந்து வளர்ந்து வரும் கலைஞர், சூப்பர் சிங்கர் திவாகர் மற்றும் பார்வதி இந்நிகழ்சியை மேலும் மெருகூட்டினர். நம் நாட்டு கலைஞர்களுக்கு முதல் முக்கியத்துவம் கொடுத்து வாய்புகளை வழங்கிய  மின்னல் ஒலி அலையின் தலைமைத்துவதிற்கு பாராட்டுகள் உரிதாகும். உள்நாட்டு கலைஞர்கள் எதற்கும் சலைத்தவர்கள் அல்ல , மிக திறமையான படைப்பாளர்கள் என்பதனை இதுபோன்ற வாய்ப்புகளின் மூலம் வெளிகொணர்ந்தனர்.

எந்த ஒரு கட்டணமும் வசூலிக்காமல் , முற்றிலும் இலவசமாக  நேயர்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி பாராட்ட கூடியதாகும். அதோடு மின்னல் ஒலி அலை அச்சு பதிந்த சட்டையும் அல்மா தமிழ்ப்பள்ளிக்கு நிதி திரட்டும் வகையில் பொது மக்களிடம் விற்க்கப்பட்டது. அல்மா தமிழ்ப்பள்ளிக்கு  காசோலையும் நிகழ்வில் வழங்கப்பட்டது.

இளையோர்களும் முதியவர்களும் கூட இந்த இசை விழாவிற்கு திரண்டிருந்தனர். தமிழ் மொழியை மலேசிய மண்ணில்  வாழ்வித்து கொண்டிருக்கும் மின்னல் ஒலி அலை குழுமத்திற்கு நன்றியும் பாராட்டுகளும் உரிதாகும். வெளிநாட்டு மோகத்தை குறைத்து உள்நாட்டு கலைஞர்களின் மவுசை அதிகரித்து, நம் நாட்டவரை ஊக்குவிக்கும் முயற்சிகள் என்றும் தொடர வேண்டும்.

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •