மிஃபாவின் அதிரடியில் ஏர் ஆசியா வீழ்ந்தது!வெற்றிக்களிப்பில் மிஃபா அணி!

0
394

இந்திய சமுதாயத்தை பிரதிநிதித்து எப்.ஏ.எம் கிண்ணப்போட்டிகளில் களம் இறங்கி சிறப்பாக விளையாடி வந்த எம்ஐஎஸ்சி – மிஃபா அணி பி பிரிவில் தனது இறுதி ஆட்டத்தை வெற்றியோடு முடித்தது.
நேற்று மாலை யூ.பி.எம் திடலில் நடந்த ஆட்டத்தில் ஏர் ஆசியா அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது. மிகுந்த பரபரப்புடன் நடைபெற்ற ஆட்டம் மிஃபா அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தது. 1-1 என்ற சமநிலையில் இருந்த பொழுது ஆட்டம் சூடு பிடிக்கத்தொடங்கியது.

நமது அணி வீரர்களின் சிறப்பான ஆட்டம் வெற்றிக்கு வித்திட்டது. ஆட்டத்தை காண வந்த மிஃபா வின் தலைவர் டத்தோ டி.மோகன் மிஃபா அணியின் அதிரடி வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் நிர்வாகி ஜெ.தினகரன் மற்றும் பயிற்றுநர் ஜேக்கப் ஜோசப் ஆகியோரை வெகுவாக பாராட்டினார்.

கடந்த ஆட்டத்தின் வெற்றியும், இந்த ஆட்டத்தின் வெற்றியு மிஃபாவின் தரத்தை உறுதி செய்துள்ளது. சமுதாயத்தினரின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை நமது மிஃபா அணி ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தைக்காண சமுதாய காற்பந்து ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டிருந்த நிலையில் அவர்களின் ஆதரவும் ,ஊக்கமும் நமது அணிக்கு உற்சாகத்தை அளித்தது. சமுதாயத்தின் கனவு அணி சமுதாயத்தினரின் கனவை நனவாக்கியுள்ளது என்றே சொல்லலாம்.

சமுதாய காற்பந்து துறை வளர்ச்சியில் மிஃபா வின் பங்கெடுப்புக்கு சமுதாயத்தினர்கள் வற்றாத ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.அடுத்த கட்டமாக நமது அணி பிரீமியர் லீக் ஆட்டங்களில் விளையாட தகுதி பெறுமா? என்பதை காண சமுதாயத்தினர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here