கோலாலம்பூர் (Mytimes)– மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் 2015 ஆம் ஆண்டிற்க்கான முதலாவது முகாம் சிலாங்கூரில் வசிக்கும் இளைஞர்களை முக்கியமாக ஆண் மாணவர்களை இலக்காகக்கொண்டு பாயா இன்டா தேசிய சேவை பயிற்சி முகம் டெங்கில், சிலாங்கூரில் நடைபெற்றது. இப்பயிற்சியில் 87 மாணவர்களும் 15 பயிற்சியாளர்களும் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து இரண்டாவது முகாம்  கோலாலம்பூரில் வசிக்கும் இளைஞர்களை (ஆண்கள்) இலக்காகக்கொண்டு செதியா இக்லாஸ் தேசிய சேவை பயிற்சி முகம் செமன்ஞெ, சிலாங்கூரில் நடைபெற்றது. இப்பயிற்சியில் 96 மாணவர்களும் 20 பயிற்சியாளர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் தொடர்ந்து தேசிய ரீதியில் இன்னும் பல இடங்களில் இந்த சிறப்பு இளையோர் வலுவூட்டும் முகாம் நடத்தப்பட்டு கொண்டுவருகிறது.

தங்குமிடம், உணவு, பயிற்சிக்கான பொருட்கள் மற்றும் பிராத்தனை கோவை பாடக் குறிப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது. விரிவுரைகள் , பட்டறைகள் , விளையாட்டு, யோகா , குழு விவாதங்கள் போன்ற முக்கிய அங்கங்களைக் கொண்டு , இளையோர் விரும்பும் வண்ணம் செயல்படுத்தப்படுகிறது. இது முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் முகாமாகும்.

இளைஞர்களின் அறியாமை மற்றும் ஒழுக்கம் இல்லாதமையை நாம் ஒருபோதும் குறை சொல்ல இயலாது ஏனென்றால் நற்செயல்களும் நற்குணங்களும் வளர்வதற்கு நாம் நமது வளமான மத அடிபடையிலான பண்பாடு, விழுமியங்கள் , மற்றும் சிறந்த வரலாறு தொட்டு மதிப்புகள் போதனைகள் கற்றுகொடுக்க வேண்டும்.

மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் இந்துதர்ம இளைஞர் பயிற்சி முகாம்கள் இளைய தலைமுறையினருக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது பதினைந்து வயதிற்கு மேற்பட்ட மற்றும் இருபது வயதிற்குக் கீழ்ப்பட்ட இந்து மதத்தை சார்ந்த மாணவர்களை முன்வைத்து மலேசிய சூழலுக்கு ஏற்ப இளைஞர்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து இம்முகாம் வரையப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடதக்கவை.

இப்பயிற்சியிற்கு மாணவச் செல்வங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்பும் பெற்றோர்கள் / உறவினர்கள் கைப்பேசி ( 012 231 1049 ) என்ற எண்களில் திரு தனபாலன் அவர்களை  தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.ஒவ்வொரு புதிய அமர்விலும் குறிப்பிட்ட எண்ணிக்கை அளவில் மட்டுமே மாணவர்கள் பதிவு செய்து கொள்ளப்படுகிறார்கள் என்பதால் எனவே ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இளைஞர்கள் பயனற்றவர்கள் அல்லர், ஆனால் குறைவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்ற கூற்றை அறிந்து இளையோர்கள் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமைவதே இவ்வியக்கதின் முக்கிய நோக்கமாகும். நம் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகளை முடக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இளையோர் உருமாற்ற பணிக்கு நாங்கள் தயாரக உள்ளோம், ஆகவே பெற்றோர்கள் எங்கள் திட்டத்திற்கு உங்கள் இல்லத்தில் இருக்கும் இளைஞர்களை அனுப்ப பங்காற்ற வேண்டும் என்று மலேசிய இந்து மாமன்ற செயலாளர் திரு. ரிஷி குமார் வடிவேலு தெரிவித்துக் கொண்டார்.(Mytimes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here