வேற வழி இல்லை – மண்ணின் மைந்தர்களின் சூப்பர் ஸ்டார் தினேஷ் குமார்

0
358

“ வேற வழி இல்லை” எனும் புதிய மலேசிய தமிழ் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. மலேசிய மக்கள் அறிந்த மண்ணின் மைந்தர் உள்ளுர் நடிகர் தினேஸ் குமார் இப்படத்திற்கு ஹீரோவாக நடித்திருக்கிறார். இவரோடு பல உள்ளூர் நடிகர்களும் இணைந்து இத்திரைப்படத்தினை உருவாக்கியுள்ளனர். “வீடு புரொடக்ஷ்ன்” முயற்சியில் உருவாக்கிய இத்திரைப்படம் மக்கள் மத்தியில் பேராதரவை பெரும் என்று நம்பப்படுகிறது.

வெளியிட்டு விழா முன்பே மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு,  நடிகர் தினேஷ் குமாருக்கு கிடைத்துள்ளது. உள்ளூர் தகவல் ஊடகங்களிலும் இணையத்திலும் பரபரப்பாக பேசப்படுகின்றது இத்திரைப்படம்.

முக்கியமாக இளையோர்கள் மத்தியில் மிக அதிகமாக இத்திரைப்பட விளம்பர போஸ்டர் முகப்புத்தகங்களில் பதிவு செய்யப்படுள்ளது. தனக்கென ஒரு தனி பானியை உருவாக்கி  மலேசிய மக்களிடையே  மிக பிரபலமான நடிகராக திகழ்கிறார் தினேஷ் குமார்.

இளையோர் முதல் வயதானவர் வரை விரும்பி பார்க்கும்  நடிப்பு திறன் கொண்ட நடிகர் தினேஷ் குமாருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர் மண்ணின் மைந்தர்களின் நட்சத்திரங்கள். மலேசிய கலையுலகத்தில்  மக்கள் மத்தியில் இவர் மண்ணின் மைந்தர்களின் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார் என்று சுற்று வட்டார தகவல் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here