பூச்சோங் (Mytimes) –  அனாதாயாக ஒதுக்கப்பட்ட நிலையில் தத்தளித்த முன்னால் தமிழ் பத்திரிக்கை நிருபருக்கு அடைக்களம் வழங்கியது , ம.இ.கா பூச்சோங் வட்டார இளைஞர் பிரிவு. இதன் தொடர்பாக , Mytimes ம.இ.கா பூச்சோங் வட்டார இளைஞர் பிரிவு தலைவர் சுபாஷ் அவர்களை தொடர்பு கொண்ட பொழுது தகவல்களைக் கொடுத்தார்.

சுற்று வட்டார நணபர்களின் மூலம் ஒரு வயதான இந்தியர் ஆடவர் ஒருவர் தங்க இடமின்றி, நடுத்தெருவில் குப்பைத்தொட்டி அருகே இருப்பதாக தகவல் பெற்றோம். எனவே உடனடியாக நாங்கள் அவ்விடத்திற்கு  அவரின் நிலையை கண்டறிய விரைந்தோம்.மிக அசுத்தமான நிலையில்,பசி பட்டினியோடு உடுத்த மாற்று உடையின்றி குப்பைத்தொட்டி அருகே படுத்திருந்தார் இவர். இவருக்கு வலிப்பு நோயும் குடிப்பழக்கமும் இருப்பதாகவும் அறிந்தோம். முதலில் அவருடன் பேசி ஆறுதல் வார்த்தைக் கூறி , அவரை குளிக்க செய்து, அவர் உடுத்த புதிய உடைகளையும் கொடுத்து பசியால் வாடியிருந்த அவருக்கு உணவு கொடுத்தோம்.

அவருடன் உரையாடும் பொழுதுதான் தெரியவந்தது அவர் ஒரு பத்திரிக்கை நிருபர் என்று. கண்ணீர் மல்க மிக வருத்ததுடன் அவர் மனகுமுறலை எங்களோடு பகிர்ந்தார். இவரின் பெயர்  மலர்விழி ஆறுமுகம். மதிக்கதக்க வாழ்ந்த ஒரு தமிழ் அன்பர். 80 – ஆம் ஆண்டு காலங்களில் மலேசிய தமிழர்கள் நன்கு அறிந்த தமிழ் நேசன் பத்திரிக்கையின் நிருபரும் ஆவார். இவரின் எழுத்தாணி வலிமைப் பெற்ற காலத்தில் பல செய்திகளை மக்களுக்கு தெரிவித்துள்ளார்.ஆனால் இன்றோ, இவரின் அவல நிலையைக் காணவோ, இவரின் குமுறலை எழுதவோ ஒரு நாதியும் இல்லை. குப்பைகளோடு குப்பைகளாய்  இவரும் தூக்கியெறிப்பட்டுள்ளார்.

குடும்பம் இருந்தும் இந்த தமிழ் எழுத்தாளன் நடுத்தெருவில் அரோகதியாய். தமிழ் செய்தி எழுதிய கைகள் இன்று அரைசான் வயிற்றுக்காக பிச்சை எடுத்து உண்கிறது.தனது குடும்பத்தினரும் இவரை ஒதுக்கிவிட்டனர். வேலையும் இன்றி நோய் நொடிகளோடு  மரணம் காலத்தை நோக்கி இவர் குப்பைத்தொட்டி அருகே வந்து விட்டார். இங்கு குறிப்பிடதக்கது என்வென்றால் இவர் ஒரு விருதுகள் பெற்ற ஒரு சிறந்த தமிழ் பத்திரிக்கை எழுத்தாளன். ஊரார் தன் நிலையைப் பார்த்து சிரித்து உமிழும் வண்ணம் ஆகிவிட்டது இவரின் பரிதாப நிலை. இருப்பினும் இவரைப் பற்றி தகவல் கொடுத்த எனது நண்பர் சத்தியா அவர்களுக்கு நன்றிகள் கூற வேண்டும், அவர் கொடுத்து இந்த தகவலினால் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளனை காப்பாற்றியுள்ளோம்.

பிறகு காப்பாரில் அமைந்துள்ள ரீதா ஹொம்ஸ் ,மூதியோர் இல்லதிற்கு டத்தோ தி.மோகன் உதவியால் இவருக்கு அடைக்களம் கொடுக்கப்பட்டது. மலர்விழி ஆறுமுகத்தின் குடும்பத்தையும் தொடர்பு கொண்டோம், ஆனால் மிக வருத்தக்க தகவல்தான் பெற்றோம், அவரின் குடுபத்தினர் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் ம.இ.கா இளைஞர் பிரிவினர் என்றும் தொடர்ந்து இவரை சந்தித்து வருவோம். இது எங்களால் முடிந்த ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு செய்யக்கூடிய சிறு உதவி  என்று விளக்கமாக தெளிவுப்படுத்தினார் ம.இ.கா பூச்சோங் வட்டார இளைஞர் பிரிவு தலைவர் சுபாஷ். இந்த நல்ல காரியத்தை செய்த இக்குழுவினருக்கு Mytimes வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது. (Mytimes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here