கூலிம் கெடா (Kolej Komuniti) இந்திய மாணவர் காராத்தே போட்டியில் வெள்ளிப்பதக்கம் – சர்வதேச நிலையில் சாதனை

0
522

புது டெல்லி (Mytimes) – புது டெல்லியில் நடைப்பெற்ற காமேன்வெல்ட் 2015, காராத்தே போட்டியில் கூலிம் கெடா (Kolej Komuniti) முதலாம் படிவ மாணவர் தனராஜ் சுப்ரமணியம் வெள்ளிப்பதக்கம் எடுத்து மலேசியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் ஊடக மற்றும் விளம்பரயியல் துறையில் (Kolej Komuniti) பயின்று வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

(Kolej Komuniti)  மாணவர்களாலும் சர்வதேச நிலையில் சாதனைப் புரிய முடியும் என்று நிறுபித்து காட்டியுள்ளார் இவர். இவருக்கு வெற்றிக்கு பக்கபலமாக கெடா மாநில காராத்தே அமைப்பும் , கூலிம் கெடா (Kolej Komuniti)  யும் அமைந்திருக்கிறது. இவரின் வெற்றி அனைத்து மலேசியர்களையும் பெருமையடைச செய்திருக்கிறது.

(Kolej Komuniti) மாணவர்கள் திறமையற்றவர்கள் என்று தப்பான கண்ணோட்டம் கொண்டவர்கள் அதனை மாற்றி கொள்ள வேண்டும். கல்வி கேள்விகலிலும் இதர துறைகளிலும் பல்கலைக்கழகம் போன்று (Kolej Komuniti) செயலாற்றி வருகிறது.இன்னும் பல சாதனையாளிகளை உருவாக்குவோம் என்று கூலிம் கெடா (Kolej Komuniti)  விரிவுரையாளர் திருமதி சரன்ஜித் கோர்  தெரிவித்தார். வெற்றி வாகை சூடிய தனராஜ் சுப்பரமணியதிற்கு  (Mytimes) வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறது. (Mytimes)

LEAVE A REPLY