கோலாலம்பூர் (Mytimes) – தேசிய விளையாட்டுத்தினத்தை முன்னிட்டு மிகப்பெரிய அளவில் மக்கள் விளையாட்டு 2015, மலேசிய இந்தியர் கலாச்சார, விளையாட்டு அறவாரியத்தின் ஏற்பாட்டில் முதன் முறையாக நடைபெறவிருக்கிறது. புட்சால், வலைப்பந்து, செப்பாக் தாக்ராவ், கால்பந்து, மேஜைபந்து விளையாட்டுக்களை உள்ளடக்கி இந்த மக்கள் விளையாட்டு 2015 நடத்தப்படுகிறது. இந்த போட்டிகள் வருகின்ற அக்டோபர் 10-ம் தேதி சனிக்கிழமை ஷா ஆலம், செக்‌ஷன் 15-ல் உள்ள சிலாங்கூர் எஸ்.யூ.கே கிளப்பில் நடைபெறவுள்ளதாக இளைஞர் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் தெரிவித்தார்.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் 2 வது சனிக்கிழமையை தேசிய விளையாட்டு தினமாக அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது. விளையாட்டுத்துறைக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடாக மலேசியாவை கொண்டு செல்லும் வகையில் அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு ஆதரவாக இந்த விளையாட்டுப்போட்டிகளை நடத்த எம்.ஐ.சி.எப் முனைப்பு காட்டியது. மேலும் அனைத்து இன மக்களும் பங்கெடுக்கும் வண்ணம் மக்கள் விளையாட்டு 2015 நடத்தப்படவிருப்பதாக மலேசிய இந்தியர் கலாச்சார விளையாட்டு அறவாரியத்தலைவர் டத்தோ டி.மோகன் கூறினார்.
மேலும் மேற்கண்ட விளையாட்டுக்களில் இந்தியர்களின் ஈடுபாட்டையும், எண்ணிக்கையையும் அதிகரிக்கும் நோக்கத்திலும், அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் இந்த போட்டிகளை நடத்துவதாகவும், இனி ஆண்டுதோறும் இந்த போட்டிகள் அரங்கேறும் எனவும் அவர் குறிப்பிட்டார். முதல் ஆண்டு என்பதனால் முதியவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அடுத்தாண்டு முதியவர்கள், தமிழ்ப்பள்ளி மாணவர்கள், தோட்டப்புற மக்கள் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும் என டத்தோ டி.மோகன் உறுதியளித்தார்.
இந்த போட்டிகளில் பங்கெடுப்பதற்கான பாரங்களை HYPERLINK “http://WWW.MISCF.ORG.MY” WWW.MISCF.ORG.MY என்ற வலைத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் மேல் விவரங்களுக்கு வினோத் 016-6133166, முகுந்தன் 014-6419650. பாரங்களை அனுப்புவதற்கான இறுதி நாள் 01.10.2015 ஆகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.(Mytimes)

LEAVE A REPLY