இன்றைய ராசிப்பலன்: 20/7/2015

0
384

மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.

ரிஷபம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புது வேலை அமையும்.  வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோ கத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பணம் வரும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள்.  வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்புகளை ஒப்படைப்பார். தைரியம் கூடும்  நாள்.

கடகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள்  வாங்குவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியா பாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய  பாதை தெரியும் நாள்.

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நேரத் தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். யாருக்கும் பணம்,  நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால்  மறைமுக நெருக்கடிகள் வந்து போகும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

கன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உறவினர், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரையும் தூக்கி எறிந்து  பேசுவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர் களுடன் மோதல்கள் வரக்கூடும். போராடி வெல்லும்  நாள்.

துலாம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.  வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். இனிமையான நாள்.

விருச்சிகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார் கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார் கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

தனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில்  பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

மகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். நன்றி  மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும்.  பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிரபலங்கள்  அறிமுகமாவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோ சனை  ஏற்கப்படும். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.

மீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர்  உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here