புத்ராஜெயா (Mytimes) – மருத்துவமனைகளைளிலும், மருத்துவ மையங்களிலும் இருக்கக்கூடிய நாள் பராமரிப்பு சிகிச்சை மையங்களின் சுகாதார சேவைகளையும் அதன் தரங்களையும் மேம்படுத்தும் முயற்சியில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்தார்.

இது ஒட்டுமொத்த சுகாதார சேவைகளில் உருமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான பரிணாம வளர்ச்சிகளில் ஒன்று என அவர் மேலும் விவரித்தார்.

நாட்டில் சுகாதார சேவைகளை வழங்குவதில் அமைச்சு முன்னனி இடத்தை நிரப்பும் பொருட்டு மேற்கொள்ளபடவிருக்கும் செயல்திட்டங்களின் அடிப்படையில் நாட்டின் 11-வது மலேசியத் திட்டத்தில் முக்கிய அம்சமாக வகுக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் வாயிலாக நாள் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அன்றைய தினமே வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என அறிவித்தார்.

முன்னதாக சபா மாநிலத்தில் அமைந்துள்ள துவாரான் மருத்துவமனையின் இரண்டாம் கட்ட மேம்பாட்டுத் திட்ட பணிகள் முடிவுற்று நேற்று அதிகாரப்பூர்வமாக அம்மருத்துவமனையின் புதிய கட்டிடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.(Mytimes)

LEAVE A REPLY