இருமொழிக் கொள்கையால் நன்மையே!

0
1661

கல்வி அமைச்சின் தமிழ்ப்பள்ளிகளில் இரு மொழிக் கொள்கை திட்டம்,மக்களால் கண்டிப்பாக வரவேற்கத்தக்க ஒன்றாக இருக்க வேண்டும். இத்திட்டத்தினால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆங்கில மொழியில் புலமை பெறுவதோடு மட்டுமல்லாமல் அவர்களால் அறிவியல் மற்றும் கணித பாடங்களிலும் சிறந்து விளங்க முடியும். மேலும், இந்தியர்கள் அறிவியலிலும் கணித பாடத்திலும் புலம் பெயர்ந்தவர்கள் என்பதனை நம் மரபனு இந்த உலகுக்கு உணர்த்தியுள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

பல்கலைக்கழகங்களில் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த துறைகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கக் கூடிய இந்திய மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் இருக்கும் பல்வேறு சூத்திரங்களை கையால்வது குதிரைக்கொம்பாகவே இருக்கின்றது. ஆரம்பப் பள்ளியில் தாய்மொழியில் கற்பிக்கப் படுகின்ற சூத்திரங்களை விளங்கிக் கொள்ள மட்டுமே முடிகின்றது. இதனை எந்த வகையிலும் பல்கலைக்கழகங்களில் கையாள முடிவதில்லை. இதன் விளைவாக, பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற அறிவியல் மற்றுக் கணிதம் தொடர்பான துறையை தேர்ந்தெடுத்துப் படிக்கக் கூடிய மாணவர்கள் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை பெற முடியாமல் போகின்றது. அதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் மேற்கல்வியை தொடரக்கூடிய மாணவர்கள் ஆங்கில மொழியில் எதிர்நோக்கும் சவால்களை நாம் கண்கூடாக காண முடிகின்றது.

ஆகவே, இதனை களையும் நோக்கில் அரசாங்கம் அமல்படுத்த விரும்பும் இவ்விருமொழி கொள்கை கல்வித்திட்டம் மாணவர்களிடையே ஆரம்பக்காளகட்டத்திலேயே ஆங்கிலத்தில் புலம்பெரும் தன்மையை அதிகரிக்கும் வல்லமை கொண்டது. சிறு வயதில் கற்றுக் கொடுக்கக் கூடிய ஒவ்வொரு விஷயமும் சிலைமேல் எழுத்து போல மனதில் பதியும். அந்த வகையில் சிறு வயதிலேயே ஆங்கிலத்தையும் கணிதத்தையும் ஆங்கில மொழியில் பயின்றால் அதிலுள்ள அனைத்து சூத்திரங்களும் பரிட்சயமானதாகிவிடும். பரிட்சயமான ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் பயிலும் போது அதுவே ஆழமாக பதிந்துவிடும். இதனால் மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதற்கும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. மேலும் எதிரகால சவால்களை சமாளிப்பதற்கும் தயாராக முடியும்.

தொடர்ந்து சில பொறுப்பற்ற தரப்பினரின் இந்த இரு மொழிக் கொள்கை கல்வித் திட்டம் மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் அழிவுக்கு வித்திடுகின்றது எனும் கூற்று முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாகும். தமிழ்ப்பள்ளிகளில் கற்றுக்கொடுக்கக் கூடிய 2 பாடங்கள் மட்டுமே இத்திட்டத்தில் பங்கேற்கப்பட விருக்கின்றன. இதனால், அந்த பள்ளிகளிலோ, ஆசிரியர்களிடமோ அல்லது சுற்றுச்சூழலிலோ எந்த வகையான மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதனை சில தரப்பினர்கள் நினைவில் கொண்டால் சிறப்பாக இருக்கும். மீதமுள்ள அனைத்து பாடங்களும் தமிழிலேதான் கற்பிக்கப்படவிருக்கின்றன. மேலும் ஆங்கிலத்தில் உரையாடுவதால் தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள பந்தத்தை இல்லை என்று கூற முடியுமா? இதுபோன்று தமிழ் ஆர்வாலர்கள் சிலர் கல்வி அமைச்சு இத்திட்டத்தினை அமல்படுத்தி தமிழ்ப்பள்ளிகளை அழிக்க வழிவகுக்கின்றது என்று கூறுவதெல்லாம் சிறு பிள்ளைத்தனமான இருக்கின்றது.

ஒரு வேளை சமுதாய தலைவர்களுக்கு இத்திட்டம் பற்றிய விளக்கங்கள் தேவைப்பட்டால் அவர்கள் தாராளமாக கல்வி அமைச்சிடம் இது தொடர்பான விவரங்களை கோரலாம். அதை விடுத்து எதையும் முழுமையாக அறிந்து கொள்ளாமல் இது போன்ற தேவையற்ற செயல்களை செய்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதை உடனடியாக நிறுத்திக் கொள்வது சிறப்பு.

இத்திட்டத்தை தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அமல்படுத்த விடாமல் தடுக்கும் தரப்பினர்களே, சற்று சிந்தித்துப் பாருங்கள் தமிழ்ப்பள்ளிக்கு சென்றாலே நமது பிள்ளைகள் தமிழில் சிறந்தவர்களாகவும் ஓழுக்கமுள்ளவர்களாகவும் உருவாகி விடுவார்கள். ஏனெனில் தமிழ்ப்பள்ளியில் இருக்கக் கூடிய ஆசிரியர்கள் மாணவர்களை தங்களது சொந்த குழந்தைகளாக பார்த்து கற்று கொடுப்பவர்கள். இருப்பினும், இக்கூறுகள் மட்டும் எதிர்கால சவால்மிக்க வாழ்க்கையை எதிர்நோக்க போதாது. முழுமைப்பெற்ற திறன் வாய்ந்த மாணவராக உருவாக மற்ற மொழிகளில் ஆழுமைத் திறனும் தேவைப்படுகின்றது. அதிலும் குறிப்பாக உலக மொழியான ஆங்கில மொழி. ஆகவே, இத்திட்டத்திற்கு வழிவிட்டு ஆங்கில மொழியிலும் திறம் படைத்த மாணவர் சமுதாயத்தை உருவாக்க முற்படுவோம் வாருங்கள்.

-அகழ்விழி

MyTimes News Portal is not responsible or does not accept any form liability for the contents and material portrayed in the article above. We publish articles and opinions without prejudice.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here