பிரிக்பீல்ட்சில் 11 மதுக்கடைகள் மூடப்படுகின்றன

0
109

பிரிக்பீல்ட்ஸ், 20 ஜூலை-  பிரிக்பீல்ட்சில் உள்ள பல மதுக்கடைகள் மூடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி, கூட்டரசு மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு துறை அமைச்சு, மதுக்கடைகளுக்கான உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அவை மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.நோட்டீஸ் அனுப்பப்பட்ட 11 கடைகளும், ஜாலான் துன் சம்பந்தன் மற்றும் ஜாலான் தம்பிபிள்ளை ஆகிய சாலைகளில் உள்ளன.காவல்த்துறை, சுங்கத்துறை மற்றும் கோலாலம்பூர் மாநகர மன்ற அதிகாரிகள் கலந்துகொண்ட ஒரு முக்கியக் கூட்டத்திற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட அந்த மதுபானக் கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.தலைநகரில் மதுபானம் அருந்தும் காரணங்களால் அதிகமான வன்முறை சம்பவங்களும், சிறு சிறு குற்றங்களும்  அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மதுபானக் கடைகளுக்கான உரிமங்களை மாநகர மன்றம் புதுப்பிக்க மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY