BERSIH 4 – பேரணியில் கலந்துக்கொள்ளாதீர், தடை விதிக்கின்றோம் – உயர்க்கல்வி அமைச்சு அறிவிப்பு !

0
269

புத்ராஜெயா (Mytimes) – BERSIH 4 – பேரணியில் கலந்துக்கொள்ளலாம் என்று மாண்புமிகு செனட்டர் Chong Sin Woon வெளியிட்டிருந்த அறிக்கைக்கு பதிலடியாக உயர்க்கல்வி அமைச்சு அந்த பேரணிக்குத் தடை விதித்துள்ளது. இந்த பேரணி அதிகாரப்பூர்வமற்றது, அதோடு அனுமதி பெறாதது என்றும் ஊடக அறிக்கை விடுத்துள்ளது. உயர்க்கல்வி கூடங்களில் பணியாற்றும் விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும், பயிலும் மாணவர்களும் BERSIH 4 – பேரணியில் கண்டிப்பாக கலந்துக்கொள்ளக்கூடாது என்று தடை விதித்திகின்றது.

இப்பேரணி  சட்டத்திற்கு புறம்பான செயல், நாட்டின் நிலைத்தன்மையை சீர்க்குழைக்க வல்லது,நாட்டின் அமைதியை கெடுக்கும் செயலாகும். பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி சட்டதின் கீழ் இது போன்ற சட்டவிரோதப் பேரணியில் கலந்துக் கொள்ளுதல் உயர்க்கல்விக் கூடங்களை நற்ப்பெயரைப் பாதிக்கும் என்ற அடிப்படையில் தடை விதிக்கப்படுகின்றது என்று உயர்க்கல்வி அமைச்சின் தலைமை  செயலாளர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ  Ir. Dr. Zaini ujang அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கை விடுத்துள்ளார்.(Mytimes)

LEAVE A REPLY