டத்தோ தி.மோகனின் பூச்சோங் இளைஞர் படை சலைக்காமல் பொதுசேவையில் ஈடுபாடு

0
527

பூச்சோங் (Mytimes) – அன்மையில் உதவிகளின்றி தத்தளித்த தமிழ் எழுத்தாளருக்கு உதவிகள் புரிந்த பூச்சோங் ம.இ.கா இளைஞர் பிரிவினர் , பலர் மத்தியில் நற்பெயரைப் பெற்றுள்ளனர். இவர்கள் இதுபோன்ற பல உதவிகளை உடனுக்குடன் அவ்வட்டார மக்களுக்கு செய்து வருவதாகவும் தெரியவருகிறது. ஈய சுரங்கத்தில் வேலைப் பார்த்து, தன் ஒரு காலையும் இழந்து பூச்சோங் வட்டாரத்தில் வாழ்ந்து வரும் திரு.மோகன் அவர்களுக்கும் இவர்கள் உதவி புரிந்துள்ளனர்.

பல நாட்களாக எந்த ஒரு வழிக்காட்டலும் இன்றி (SOCSO) உதவி தொகை கிடைக்கப்பெறாமல் அவதியுற்று வந்த இவருக்கு உடனடியாக இளைஞர் பிரிவினர் ஒரு தீர்வு கண்டுள்ளனர்.(SOCSO) உதவி தொகை கிடைக்கப்பெறாத காரணத்தை அறிந்து முறையான முறையில் விண்ணப்பம் செய்து அதன் தொடர்பான அதிகாரிகளைச சந்தித்து இவருக்கு (SOCSO), கிடைக்க முழு வழிக்காட்டப்படுள்ளது.

ஒரு கால்களை வைத்து தள்ளுவண்டியில் தன் வாழ்க்கை வாழ்ந்து வரும் இவருக்கு இது ஒரு பேருதவி என்றும் இதற்கு வழிகாட்டிய பூச்சோங் இளைஞர் பிரிவினருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொண்டார் திரு.மோகன்.

தொடர்ந்து நாங்கள் எங்கள் பொதுசேவை கடமையை முறையாக செய்து வருவோம்.இந்திய மக்களுக்கு தேவைப்படும் உதவிகளுக்கு முறையான முறையில் தீர விசாரிக்கப்பட்டு உதவிகள் செய்யப்படும் என்று பூச்சோங் ம.இ.கா இளைஞர் திரு சுபாஷ் சந்திரபோஷ் தெரிவித்தார்.(Mytimes)

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •