கலைத்துறையில் முந்தியடித்து வரும் போராட்டத்திற்கு விடாமுயற்சியே முக்கியம் – வளர்ந்து வரும் கலைஞர் விக்டர் விமல்

0
734

கோலாலம்பூர் (Mytimes) – இன்றையக் காலகட்டத்தில் இந்தியர்களிடையே முக்கியமாக இளைஞர்களிடையே கலைத்துறையில் அதிக ஈடுபாடு மிகுந்துள்ளது. பாடல் வெளியிடுவது, நாடகம் , தமிழ்ப்படம், இசை நிகழ்ச்சிகள், கலைக்கச்சேரி போன்ற பல உள்ளூர் கலைத்துறைகளில் மலேசிய இந்திய மக்களின் ஈடுபாடும் ஆர்வமும் அதிகமாக உள்ளதைக் காணமுடிகிறது. உள்ளுர் கலைஞர்களின் திறமைக்கும் படைப்புக்கும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இருப்பினும், நம் உள்நாட்டு கலைஞர்களுக்கு வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளது. திறமைகள் இருந்தும் வாய்ப்புகளின்றி தத்தளிக்கின்றனர் பல இளவட்ட கலைஞர்கள் என்று கலைத்துறையில் முந்தியடித்து வரும் போராட்டத்தைப் பற்றி (Mytimes) -வோடு பகிர்ந்துக்கொண்டார் வளர்ந்து வரும் கலைஞர் விக்டர் விமல்.

இவரது பூர்வீகம் பேராக் மாநிலமாக இருந்தாலும் இவர் இப்பொழுது கோலாலம்பூரில் வாழ்ந்து வருகிறார். மலேசிய தேசியப் பல்கலைக்கழத்தில் தகவல் ஊடகவியல் துறையில் இளங்கலைப் பட்டம்பெற்று, தனியார் நிறுவனத்தில் பணிப்புரிகிறார் விமல். பாடல் பாடுவது, பலகுரல்களில் பேசுவது, படம் மற்றும் நாடகங்களில் நடிப்பது, நிகழ்ச்சி தொகுப்பாளராகுவது, இசை கருவிகள் வாசிப்பது, நகைச்சுவை செய்யவது போன்ற பல கலைத்திறமைகளைக் கொண்ட இவர், பகுதிநேரமாகதான் தன்னுடைய திறமைகளை கலைத்துறையில் ஈடுபடுத்த முடிகின்றது என்கிறார்.

முழுநேரமாக இந்த துறையில் ஈடுபட முடியவில்லை, காரணம் வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளது, வயிற்று பிழைப்புக்காக ஒரு நிரந்தர வேலை செய்ய வேண்டியுள்ளது, இருக்கும் விடுமுறை மற்றும் ஓய்வு நேரங்களில் மனதின் நிம்மதிக்காக கலைத்துறையில் பயணிக்கிறேன். தன் கையே தனக்குதவி என்பதற்கொப்ப தானே சென்று வாய்ப்புகளை தேடிப் பிடித்து பயன்படுத்தி கொள்ள வேண்டிய சூழ்நிலை அமைந்துள்ளது. வாய்ப்புகள் கலைஞர்களை தேடி வந்த காலம் மறைந்து விட்டது. விடா முயற்சியும் கலைத்துறையின் மேல் உள்ள ஈடுபாடும்தான் கலைஞனை உருப்பெற செய்யும் மற்றும் வாழவும் வைக்கும் என்கிறார் விமல்.

மொத்தம் 36 குரல்களில் பேசக்கூடிய திறன் கொண்டவர் விமல். அஸ்ட்ரோ (Astro) மற்றும் ஆர்.தி.எம் (RTM) போன்ற முக்கிய தொலைக்காடச்சி, வானோலி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருகிறார். மலாய் மற்றும் ஆங்கில மொழியிலான நிகழ்சிகளிலும் , நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் இவர். (Papachef), (The Moment),(Estate Boys), (Super Babies),வேற வழி இல்லை,  இளமை , (Cinta Agra), (Amin), (Cha Cha Masuk Asrama )  போன்ற பிரபலமான திரைப்படம், குறுப்படம்,நாடகம்,வானொலி நாடகம்,பின்னனி குரல் கொடுத்தல்களில் விமல் பெயர்பதித்துள்ளார்.

இன்னும் பல சாதனைகளை இதுறையில் புரியுள்ளதாகவும், மலேசியாவில் ஒரு சிறந்த கலைஞனாக பெயர்பதிக்க வேண்டும் என்பது இவரின் அவா. வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும்,  பிறமொழிகளில் கிடைக்கப்பெருகின்ற மற்ற வாய்ப்புகளை எப்படியாவது நமக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள விடாமுயற்சியுடன் ஈடுபட வேண்டும்.

குறைக்கூறி கொண்டிருந்தால் நமக்கு வழிக்காட்ட யாவரும் வருவதில்லை, எனவே நாமே களத்தில் இறங்க்கி நமக்கு தேவையான வாய்ப்பை தேடிக்கொள்ள வேண்டும். தனக்கென உள்ள தனித்திறமையைக் கொண்டு விடாமுயற்சியுடன் தமிழ், மற்றும் பிற மொழிகளில் உள்ள கலைத்துறையில் சாதனைப் படைப்பேன் என்கிறார் பிரபல பலகுரல் மன்னன் விக்டர் விமல். (Mytimes)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here