1MDB கடனை இன்னும் 6 மாதத்தில் குறைக்க முடியும்- அருள் கந்தா நம்பிக்கை

0
533

கோலாலம்பூர், 13 ஆகஸ்டு – 1MDB கடனை குறைக்கும் அந்நிறுவனத்தின் திட்டம் ரிங்கிட் விலை வீழ்ச்சியால் ஒரு போதும் பாதிக்கப்படாது என அந்நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி அருள் கந்தா தெரிவித்தார். இதன்மூலம், 1 எம்.டி.பி நிறுவனம் அமெரிக்க டாலரில் உள்ள வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த முடியும் என அவர் தெரிவித்தார். “நமக்கு அபு தாபியிலும், பாகிஸ்தானிலும் சொத்துக்கள் உள்ளன. இவையனைத்தும் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட சொத்துக்கள்” என TV3 தொலைகாட்சி அலைவரிசைக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதனிடையே அமெரிக்க டாலர்களை அடிப்படையாகக் கொண்ட மேலும் பல சொத்துக்கள் நமக்கு உள்ளன. இதன் மூலம் 1 எம்.டி.பி சரியான பாதையில் தான் சென்றுக்கொண்டிருக்கிறது. இதன்மூலம் இன்னும் 6 மாதங்களில் 1MDB கடனை குறைத்துவிட முடியும் என அருள் கந்தா நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here