பலத்த காற்று வீசும், கடல் அலைகள் உயரும்- புவியியல் இலாகா எச்சரிக்கை

0
580

கோலாலம்பூர், 20 ஜூலை- எதிர்வரும் புதன்கிழமை வரை புக்கெட் கடற்கரையோரப்பகுதிகளில்  பலத்த காற்றும் கடல் அலைகளின் உயரமும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக, கடல் அலைகள் 3.5 மீட்டர் வரை உயரும் என புவியியல் இலாகா தெரிவித்துள்ளார்.இவ்வாறு பலத்த காற்று வீசுவது, சிறு படகுகளுக்கும், கடல்சார்ந்த பொழுது போக்கு நடவடிக்கைகளுக்கும் ஆபத்தாக முடியும் என்றும் புவியியல் இலாகா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here