புகைமூட்டத்தினால் காற்று தூய்மைகேட்டின் அளவு அதிகரிப்பு – நான்கு மாநிலங்களில் பள்ளிக்கூடங்களை மூட கல்வி அமைச்சர் உத்தரவு

0
643

கோலாலம்பூர் (Mytimes)– சிலாங்கூர்,கோலாலம்பூர்,புத்ராஜெயா, மலாக்கா,நெகிரி செம்பிலான் மாநிலங்களில் பள்ளிக்கூடங்களை மூட கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ மகாட்சிர் காலிட் அவர்கள் உத்தரவு விடுத்துள்ளதாக துணைக்கல்வி அமைச்சர் ப.கமலநாதன் அறிவித்துள்ளார். புகை மூட்டத்தின் அளவு மிகுந்துள்ளதால் , இது மாணவர்களின் உடல்நலத்தை பாதிப்புள்ளாக்கும் அபாயம் உள்ளதால் இம்மாநில பள்ளிகளுக்கு விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை துணைக்கல்வி அமைச்சர் ப.கமலநாதன் தனது (Twitter) மற்றும் (Facebook) வழியாக 14 செப்டம்பர் 2015 இரவு 11.34 மணிக்கு  அறிவித்திருந்தார். புகைமூட்டத்தினால் காற்று தூய்மைகேட்டின் அளவு அதிகரித்துள்ளது, இது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்ககூடும் மற்றும் மேலும் இந்த அளவு செவ்வாய்கிழமை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.(Mytimes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here