டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேலின் எச்சரிக்கையையும் மீறி மத்திய செயலவை கூட்டம் நடைபெற்றது

0
623

கோலாலம்பூர், 16 ஜூன்-  ம.இ.காவில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேலின் எதிர்ப்பையும் மீறி, 2009-2013-ஆம் ஆண்டு மத்தியச் செயலவைக் கூட்டம் சற்று முன்னர் நடைபெற்றது.அக்கூட்டத்திற்கு ம.இ.கா-வின் துணைத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையேற்றார்.

  இந்த மத்திய செயலவைக் கூட்டத்தில்  இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம். சரவணன்,  பேரா மாநில சட்டமன்ற சபா நாயகர் டத்தோ ஶ்ரீ எஸ்.கே தேவமணி உட்பட மேலும் 10 பேர் கலந்துக்கொண்டனர்.முன்னதாக, தமது எச்சரிக்கையையும் மீறி சட்டவிரோத கூட்டம் நடத்திய 2009-2013-ஆம் ஆண்டு, மத்திய செயலவை உறுப்பினர்கள் 14 பேரை டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் 12 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கத்து.

கட்சித் தலைவர்களால் இடைநீக்கம் செய்யப்பட்ட 14 பேரின் விபரங்கள் பின்வருமாறு:-மாண்புமிகு டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், மாண்புமிகு டத்தோ எம் சரவணன், மதிப்புமிகு டத்தோ ஶ்ரீ எஸ்.கே தேவமணி, திரு.என். ரவிசந்திரன், டத்தோ ஆர் கணேசன், டத்தோ எம்.தேவேந்திரன், டத்தோ கே.ஆர்.ஏ நாயுடு, டத்தோ வி.எம் பஞ்சமூர்த்தி, திரு. பி.மணிவாசகம், திரு.எஸ் ஆனந்தன், திரு. எம். மதுரைவீரன், மாண்புமிகு டத்தோ எம்.அசோஜன், திரு.பி. ஷண்முகன் மற்றும் திருமதி மோகனா முனியாண்டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here