ஜூன் 21 சர்வதேச யோகா தினம்

0
718

ஜூன் 21 திகதி உலகளாவிய ரீதியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திரா மோடி தன்னுடைய முகபுத்தகத்தின் வழி நினைவுப்படுத்தினார். 21 ஜூன் 2015 முதன்முறையாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் நாளாகும். இனி குறிப்பிட்ட இந்நாள் தொடர்ந்து செயல்ப்படுத்தப்படும் என்றும் விவரித்துள்ளார். யோகா கலையை மக்கள் இயக்கமாக மாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என்றும், முதலாவது சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாய் ஆயுத்தப்பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர் அவர் முகநூலில் எழுதியிருக்கிறார். உலக மக்களின் ஆதரவு மிக சிறப்பாக அமைந்து உற்சாகத்தை அதிகப்படுத்தியுள்ளது. 2015- ஆண்டில் துவக்கப்பட்ட இந்த சர்வதேச யோகா தினம் உலகளாவிய நிலையில் மறக்க முடியாத சரித்திர நிகழ்வாக அமைந்து ,யோகா கலையை மக்கள் இயக்கமாக உருப்பெற செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here