அம்னோ இளைஞர் பிரிவின் விமர்சனத்திற்கு பிரதமர் கண்டனம்

0
325

கோலாலம்பூர், ஆகஸ்டு 8- தமது வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் இருப்பது குறித்து அம்னோ இளைஞர் பிரிவினர் சிலர் முன்வைத்து வரும் விமர்சனங்கள் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் கண்டனம் தெரிவித்தார்.

“கட்சித் தலைவர் என்ற வகையில், தாம் எடுக்கும் எந்த ஒரு முடிவும், கட்சியின் நலனுக்காகவே மேற்கொள்வேன். நான் நன்கொடையைப் பெற்றாலும் அது அனைத்துமே கட்சிக்குத் தான்” என பிரதமர் தெரிவித்தார்.

 “நான் கட்சித் தொகுதிகளுக்கு மாதாந்திர  ஒதுக்கீடுகள் மூலம் உதவி வருகிறேன். நான் அம்னோ கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு அதிகமான  சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். பணம் வரும் வரையில் அமைதியாக இருந்தவர்கள், பிறர்  என்னைத் தாக்கும் போதும் அமைதியாகவே உள்ளனர்.

 ‘நான் “ஆம் சாமி” போடுபவர்களை மட்டும் அருகில் வைத்துக்கொள்ளும் தலைவர் அல்ல. நானும் பல தரப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்வேன்” என பிரதமர் தெரிவித்தார்.

LEAVE A REPLY